சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. 1989 ஐ.பி.எஸ். அணியில் இதர அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தபோது பிரமோத்குமார் வழக்கு நிலுவையில் இருந்தது. வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அப்போது பிரமோத்குமாருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பிரமோத்குமார் மீதான புகார்களை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அவர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது.