அகமதாபாத் : அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே பரிசுத் தொகையான ரூ.20 கோடி சென்னை அணிக்கும் 2ம் இடம் பிடித்த குஜராத்திற்கு ரூ.12.5 கோடியும் வழங்கப்பட்டது. நேர்மையாக விளையாடிய அணியாகவும் குஜராத் தேர்வு செய்யப்பட்டது. 17 போட்டிகளில் 4 அரை சதம், 3 சதம் என இந்த சீசனில் அதிகபட்சமாக 890 ரன்கள் குவித்த குஜராத் வீரர் சுப்மன் கில்லுக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது.
மதிப்புமிக்க வீரர் விருது, இந்த சீசனில் அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்த வீரர், ஒரே இன்னிங்சில் அதிகபட்சமாக 10 சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமைகளை சுப்மன் கில் பெற்றுள்ளார். 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் வீரர் முகமது ஷமிக்கு பர்பிள் தொப்பி கிடைத்துள்ளது. இந்த சீசனில் முகமது ஷமி மட்டுமே அதிகபட்சமாக 193 டாட் பால்கள் வீசியுள்ளார். சுப்மன் கில்,முகமது ஷமி ஆகியோருக்கு இருவருக்கும், தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.குஜராத் வீரர் ரஷீத் கான் மட்டுமே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
16ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
எமர்ஜிங் பிளேயர்: யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
மதிப்புமிக்க வீரர்: சுப்மன் கில்
சிறந்த கேட்ச்: ரஷித் கான்
நேர்மையாக விளையாடிய அணி: டெல்லி கேபிடல்ஸ்
அதிக விக்கெட்கள் (28): முகமது ஷமி
அதிக ரன்கள் (890): சுப்மன் கில்
ட்ரீம்11 கேம்சேஞ்சர் ஆஃப் சீசன் : சுப்மன் கில்
வான்கடே ஸ்டேடியம் மற்றும் ஈடன் கார்டன்ஸ் சிறந்த பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருதை வென்றன.