1. ஐபிஎல் குவாலிபையர் 2 போட்டி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
2. இப்போட்டியில், முதல் குவாலிபையரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியும், எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
3. இன்றைய போட்டியில் வெல்லும் அணி வரும் 3ம் தேதி, அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும்.
4. லீக் சுற்றுகளில் பஞ்சாப் அணி, 14 போட்டிகளில் ஆடி 9ல் வெற்றி, 4ல் தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
5. லீக் போட்டிகளில் மும்பை அணி 14 போட்டிகளில் ஆடி 8ல் வெற்றி, 6ல் தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4ம் இடம் பெற்றது.
6. ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளும் இதுவரை, 32 போட்டிகளில் ஆடியுள்ளன. அதில், மும்பை 17 முறையும், பஞ்சாப் 15 முறையும் வென்றுள்ளன.
7. அவற்றில் அதிகபட்சமாக, மும்பை 223 ரன்னும், பஞ்சாப் 230 ரன்னும் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக, மும்பை 87 ரன், பஞ்சாப் 119 ரன்னில் சுருண்டுள்ளன.