சென்னை: திராவிட மாடல் அரசின் கீழ் முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகள் மழை பொழிந்து நமது மாநில வளர்ச்சிக்கு ஆற்றலை தரும் நாள். ரூ.17,616 கோடி முதலீடுகளுக்கான 19 தொழில் நிறுவனங்களின் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.