தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஜனவரி 14ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (25) என்பவரை, போலீசார் கடுமையாக தாக்கிய சிசிடிவி வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அபுதுல்ஹா, எஸ்எஸ்ஐ சிவசுப்பு, போலீசார் பாண்டி, மாரிச்சாமி, வாலிராஜன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். நேற்று தேனி ஏடிஎஸ்பி ஜெரால்டு அலெக்சாண்டர், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். பின்னர், போலீஸ் ஸ்டேஷனில் தாக்கப்பட்ட தெற்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷை விசாரிப்பதற்காக சென்றபோது அவர் வீட்டில் இல்லை. அப்பகுதியைச் சேர்ந்த சதீ, முத்துக்கிருஷ்ணன், தமிழன் ஆகியோரிடம் விசாரணை செய்தார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசாரிடமும் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் டிரைவரை தாக்கிய விவகாரம் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏடிஎஸ்பி ஆய்வு
0