நன்றி குங்குமம் தோழி
* இன்வெர்ட்டரையும், அதன் பேட்டரியையும் சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே இன்வெர்ட்டரின் ஆயுள் நீடிப்பதோடு, அது சிறப்பாகவும் இயங்கும்.
* இன்வெர்ட்டர் பேட்டரி வைக்கும் இடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும். சூரிய ஒளி படும் இடத்திலோ, சமையலரை வெப்பமான இடத்திலோ இருக்கக் கூடாது. பேட்டரி இயங்கும் போது வெப்பம் அதிகரிக்கும் நிலையில் நேரடியாக வெப்பம் படும் இடத்தில் இருந்தால் அதிகப்படியான நீர் ஆவியாகும்.
* இன்வெர்ட்டர் பேட்டரியை வீட்டில் இருக்கும் மற்ற பொருட்கள் போன்று சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இன்வெட்டர் பேட்டரியின் டெர்மினல்களை பேக்கிங் சோடா கலந்து நீரில் சுத்தம் செய்யலாம். அப்போதுதான் பேட்டரி முழுத்திறனுடன் சார்ஜ் ஆகி மின்வெட்டு நேரத்தில் கை கொடுக்கும்.
* மின்வெட்டு ஏற்படாத காலங்களில் பயன்படுத்தாத போது பேட்டரியை டிஸ் சார்ஜ் செய்து விடலாம். மின்வெட்டு ஏற்படும் போது அது நமக்கு நீண்ட நேரம் மின் வசதியை வழங்க முடியாது. அதனால் இன்வெர்ட்டரை மாதம் ஒரு முறையாவது பயன்படுத்தி பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்து வைக்க வேண்டும்.
*பேட்டரியின் ஒவ்வொரு களத்தில் உள்ள நீரின் அளவை சரிபார்த்து தேவைப்படும் நேரத்தில் டிஸ்டில்டு வாட்டர் ஊற்றி வைக்கவும்.
*லாரியில் உள்ள பேட்டரி இருக்கும் பெட்டியில் ‘தினமும் என்னை பார்’ என்ற வாசகம் இருக்கும். நாள்தோறும் பேட்டரியை தவறாமல் பராமரித்தல் என்பதே இதன் அர்த்தம். வீட்டில் இயங்கும் பேட்டரிக்கும் இது பொருந்தும்.
தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.