சென்னை: எஸ்.என்.ெஜ. நிறுவனம் சார்பில் பிரிட்டிஷ் எம்பயர் தண்ணீர் பாட்டில் மற்றும் எஸ்.என்.ஜ.10,000 பெயரிலான சோடா ஆகிய 2 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு எஸ்.என்.ஜே குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சர்க்கரை, நாட்டு சர்க்கரை, மருந்து நிறுவனங்களுக்கான சர்க்கரை ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. இந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதுதவிர மாட்டுத் தீவனம், மின்சாரம், எத்தனால் ஆகியவற்றையும் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் பிரிட்டிஷ் எம்பயர் தண்ணீர் பாட்டில் மற்றும் எஸ்.என்.ஜே 10000 சோடா ஆகிய 2 புதிய பொருட்களையும் தயாரித்து தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஜே. குழுமத்தின் சார்பில் பிரிட்டிஷ் எம்பயர் தண்ணீர் பாட்டில் மற்றும் எஸ்.என்.ஜே 10,000 சோடா ஆகிய புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் எம்பயர் தண்ணீர் பாட்டில் 300 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர், 2 லிட்டர் ஆகிய வகைகளிலும், எஸ்.என்.ஜே 10,000 சோடா 300 மில்லி மற்றும் 750 மில்லி ஆகிய வகைகளிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் எஸ்.என்.ஜே. குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என்.ஜெயமுருகன், குழும இயக்குநர் நந்தினி ஜெயமுருகன், எஸ்.எம்.பிவரேஜ் நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, நடிகை ஷிவானி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் எஸ்.என்.ஜே. குழும தலைவர் ஜெயமுருகன் பேசுகையில், ‘‘பிரிட்டிஷ் எம்பயர் தண்ணீர் பாட்டில் மற்றும் எஸ்என்ஜே சோடா ஆகியவற்றின் விற்பனை இந்தியா முழுவதும் பரவ வேண்டும்’’ என்றார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ‘‘எஸ்.என்.ஜே நிறுவனம் அற்புதமான, சுத்தமான குடிநீரை தயாரித்துள்ளனர். எஸ்.என்.ஜே. நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது தந்தையின் உழைப்பு பற்றி கூறினால் ஒரு புத்தகமே எழுதலாம். எஸ்.என்.ஜே நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சர்க்கரை, நாட்டு சர்க்கரை மிகவும் தரமானது, கலப்படம் இல்லாத சுத்தமாக தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருந்தே தண்ணீரை எடுத்து நமக்கு விற்பனை செய்து லாபம் எடுத்து செல்கின்றனர். ஆனால், இது நம்மூர் தயாரிப்பு.
இந்த நிறுவனத்தின் லாபம் தமிழ்நாட்டில்தான் இருக்கும். இதனால் தமிழக மக்களுக்கு தான் நன்மை’’ என்றார். கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் பேசுகையில், ‘‘உடலுக்கும், உலகுக்கும் தண்ணீர் மிகவும் முக்கியம். அதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு அதிகம் தண்ணீர் குடிப்பது என்பது முக்கியம். விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல. அனைவரும் அதிகம் தண்ணீர் பருக வேண்டும் என்றார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.