மாலே: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு முறை பயணமாக மாலத்தீவு சென்று இருந்தார். அந்நாட்டின் அதிபர் முகமத் முய்சுவை அமைச்சர் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து மாலத்தீவில் இந்தியாவின் யூபிஐ மூலமாக பணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில்,‘‘மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாலத்தீவின் பொருளாதார மேம்பாடு மற்றும் வர்த்தக அமைச்சகத்துடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.