மும்பை: பணத்தாசை பிடித்தவர் என்று கூறும் விமர்சனங்கள் என்னை பாதிக்காது என்று கிரிக்கெட் வீரரின் மாஜி மனைவி தனஸ்ரீ வர்மா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஜ்வேந்திர சாஹல் – யூடியூபர் தனஸ்ரீ வர்மா ஜோடிக்கு திருமணம் நடந்தது. கொஞ்ச காலம் ஜாலியாக இருந்த இந்த ஜோடி, இந்தாண்டு மார்ச் 20ம் தேதி தங்கள் திருமண உறவை முறித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, தனஸ்ரீ மீது பணத்தாசை பிடித்தவர் என்று பல்வேறு வதந்திகளும் விமர்சனங்களும் எழுந்தன. இதுகுறித்து தனஸ்ரீ வர்மா அளித்த பேட்டி ஒன்றில், ‘எதிர்மறை விமர்சனங்களும், என்னைப் பற்றி புண்படுத்தும் கருத்துகளை கூறுவதும் என்னை ஒன்றும் பாதித்ததில்லை; இனியும் பாதிக்காது. என்னுடைய இந்தக் காலகட்டத்தில் என்ைன மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
நான் எனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன். பல பொறுப்புகளை எடுத்துக் கொண்டு சமாளித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒருவித படிப்பினை தருகிறது. ஒவ்வொரு நாளையும் சவாலாக மாற்றி வருகிறேன். என்னை பணத்தாசை பிடித்தவர் என்று கூறுகின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை’ என்றார். ஐந்து வருடங்களாக திருமணமாகி இருந்த தன மற்றும் யுஸ்வேந்திரா, கொரோனா ஊரடங்கின் போது டேட்டிங் செய்யத் தொடங்கினர். அப்போது கிரிக்கெட் வீரர் யுஜ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் ஆன்லைன் நடன வகுப்புகளில் சேர்ந்தார். அவர்கள் டிசம்பர் 2020 திருமணம் செய்து கொண்டனர், இந்தாண்டு மார்ச்சில் விவாகரத்து பெறுவதற்கு முன்பு 18 மாதங்கள் தனித்தனியாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.