Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

மீண்டும் வீடுகள் எரிப்பு, துப்பாக்கி சூடு மணிப்பூரில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கம்

இம்பால்: மணிப்பூரின் நேற்று மீண்டும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரின் உக்ருலில் டாங்குல் நாகா சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஞாயிறன்று தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து அங்கு மோதல் வெடித்தது. உக்ருல் மற்றும் கம்ஜோங் மாவட்டங்களில் டாங்குல் நாகா அமைப்புக்கள் குக்கி சமூகத்தினரின் நடமாட்டத்தை நேற்று முன்தினம் தடை செய்தனர். இந்நிலையில் சரேய்கோங் பகுதியில் நேற்று துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்தன.

மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியதால் அவர்களது வீடுகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். ஆங்காங்கே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டபடி இருந்தது. இதனால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.