சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 வில் குறும்படப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வெற்றியாளருக்கு ரூபாய் ஒரு இலட்சம் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0வில் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் 30.06.2025 அன்று அலையன்ஸ் பிரஞ்சைஸ் ஆப் மெட்ராஸில் (Alliance Francaise of Madras) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இக்குறும்படப் போட்டியை மாஸ்டரிங் கேம்பஸ் கேரியருடன் (Mastering Campus Carriers (MC2) இணைந்து வடிவமைத்து ஒருங்கிணைக்கப்பட்டது.
கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த குறும்பட திரைப்பட போட்டியின் விதிமுறைகளும், “அன்றொரு நாள் கழிப்பறையில்” என்ற போட்டியின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் இடத்தை ஒரு லட்சம் ரொக்க பரிசையும் ‘டைலர் டர்டன் கினோ பிஸ்ட்’ தயாரிப்பு நிறுவனத்தில் தங்கள் கதையை சொல்லும் வாய்பையும் பிரணத்தி சாம்பள்ளே அவர்கள் இயக்கிய “சான்டாட்ஸ்” குறும்படம் தேர்வு செய்யப்பட்டது. இவருக்கு ரூபாய் ஒரு இலட்சத்திற்கான ரொக்கப்பரிசினையும் நினைவுப் பரிசினையும் போட்டியின் நடுவர்கள் திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் வழங்கினர்.
இரண்டாம் இடத்தை பெற்ற ஆனந்த். எம். ஜே இயக்கிய வெளிக்கி குறும்படமும், மூன்றாம் இடத்தை அமர் கீர்த்தி இயக்கிய முரல் குறும்படமும் பெற்று ‘டைலர் டர்டன் கினோ பிஸ்ட்’ தயாரிப்பு நிறுவனத்தில் தங்கள் கதையை சொல்லும் வாய்பை பெற்றுள்ளது.
அத்துடன் இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது. நடுவர்கள் திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி, கவிஞர் யுகபாரதி மற்றும் திரைப்பட இயக்குனர் ஷான் ஆகியோருடன் இணைந்த சிறு கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திரையிடப்பட்ட குறும்படங்களின் தலைப்புகள் குறித்தும் படங்களின் கதைகள் குறித்தும் பங்கேற்பாளர்களின் கேள்வி பதில்கள் உள்ளிட்ட கலந்துரையாடல்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.