ஜோகனஸ்பர்க்: ஹென்ரிச் கிளாசன், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். பணி, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் போதிய நேரம் ஒதுக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரான்சைஸி அணிகளுக்காக ஆடுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இவர் தற்போது, ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
அதேபோல், ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் (36) ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 2026ல் நடக்கவுள்ள ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகளுக்கு தயாராவதில் கவனம் செலுத்தப் போவதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இவர் தற்போது, ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளாசன் ஓய்வு: ஓடிஐக்கு விடைகொடுத்த மேக்ஸ்வெல்
0