டெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. வெள்ளை பந்து விதி மாற்றங்கள் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நிலையில், ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–27 புள்ளிகள் அட்டவணை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,
ஸ்டாப் க்ளாக்
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும். இல்லையெனில் இருமுறை எச்சரிக்கை விடப்படும். 3வது முறை தாமதம் செய்தால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் அமலாகும்.
எச்சில் தடவினால்
பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது. கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
பந்தை மாற்றுவற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
கிரீஸை தொடாமல் ரன்
ஓடி ரன் எடுக்கும்போது வீரர் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால், அந்த ரன் வழங்கப்படாது. பேட்டர்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் முடிவு செய்யலாம்.
DRS முறையீடு
Wide, Out உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பவுலிங் கேப்டன் DRS கேட்டு, 3வது நடுவரிடம் Referral கோரினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையீடே முதலில் ஏற்றுக்கொள்ளப்படும்.
No Ball கேட்ச்
No Ball பந்தை பேட்டர் அடித்து அது கேட்ச் பிடிக்கப்பட்டால், அது முறையான கேட்ச் எனும்பட்சத்தில் ஒரு ரன் மட்டுமே வழங்கப்படும். முறையாக பிடிக்கப்படவில்லை எனில், பேட்டர்கள் ஓடி எடுத்த ரன்கள் வழங்கப்படும்.
DRS வாய்ப்பு
விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததற்கு நடுவர் அவுட் கொடுக்க, அதற்கு DRS கோருகிறார் பேட்டர். சோதனையில் பந்து பேட்டில் படாமல் Pad-ல் பட்டிருந்து, LBW சோதனையில் Umpires Call-ஆக இருந்தாலும் அது Not Out என வழங்கப்படும். புதிய விதியின்படி Original Decision, Umpires Call எதுவாக இருந்தாலும் அவுட் வழங்கப்படும்.