சென்னை: பாமக உட்கட்சி தகராறில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் உட்பட 4 பேர் மீது சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 20-ம் தேதி நடந்த பாமக ஆலோசனை கூட்டத்துக்கு பின் பாமக பிரமுகர் முனுசாமியை தாக்கிய புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ், டில்லி, சுதாகர், பிரசாத் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.