சென்னை: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதியரசர் சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ விசாரணை கோரி ராஜ்கமல் என்பவர் தொடர்ந்த வழக்கை நவ.7-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.