Sunday, March 3, 2024
Home » பாஜ வேட்பாளர் தேர்வில் தலையீடா? அலறும் தமிழிசை

பாஜ வேட்பாளர் தேர்வில் தலையீடா? அலறும் தமிழிசை

by Ranjith

புதுச்சேரி ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார கல்வி மையத்தில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத்தை கவர்னர் தமிழிசை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு உரையை ஆளுநர் பாதியில் நிறுத்திவிட்டு சென்ற விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவாக வெளியாகும் தகவல் வதந்திதான்.

பிரச்னை வந்தால் தமிழிசை காரணம், நல்லது நடந்தால் ஆளுநருக்கு அதற்கும் சம்பந்தம் கிடையாது என்ற போக்கு உள்ளது. பாஜ வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு நான் காரணம் கிடையாது. அதற்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது. தெலங்கானாவில் நான் யாருடன் சண்டை போடுவதில்லை. அவர்கள் சண்டை போட்டால் நான் பொறுப்பில்லை. தேர்தலில் போட்டியிடுவேனா என்பது சஸ்பென்ஸ் என ஏற்கனவே கூறியிருந்தேன்’ என்றார்.

You may also like

Leave a Comment

thirteen + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi