Thursday, February 22, 2024
Home » கால்நடை, மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரூ.1500 கோடி வட்டியில்லா கடன்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

கால்நடை, மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரூ.1500 கோடி வட்டியில்லா கடன்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

by Ranjith

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1500 கோடி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 2023-24ம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார்.

அதனை செயல்படுத்தும் விதமாக கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதன கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ.1500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi