சென்னை: ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ரூ.3.6 கோடியை, 18% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது A3V தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் தயாரித்த ‘மன்னர் வகையறா’ படத்துக்காக கோபி என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.3.6 கோடியை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்தபோதும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.