ஒன்றிய அரசின் உளவுத்துறையில் காலியாக உள்ள செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/மோட்டார் டிரான்ஸ்போர்ட் எக்சிக்யூட்டிவ் மற்றும் பல்நோக்கு பணியாளர் ஆகிய 677 இடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னைக்கு செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/ மோட்டார் டிரான்ஸ்போர்ட் எக்சிக்யூட்டிவ் பணிக்கு 9 இடங்களும், பல்நோக்கு பணியாளர் பணிக்கு 14 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பணியிடங்கள் விவரம்:
1. Security Assistant/Motor Transport Executive: 362 இடங்கள். சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 27க்குள். தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்று பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் மொழியை பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
2. Multi Taskins Staff (General): 315 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்று பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் அலுவல் மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரரின் வயது வரம்பு 13.11.2023 தேதியின்படி கணக்கிடப்படும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்ிறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும், விதவை பெண்களுக்கு அரசின் விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: விண்ணப்ப கட்டணம் ₹450/-, தேர்வுக் கட்டணம் ₹50/-. இதை ஸ்டேட் வங்கியில் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.