சென்னை: அறிவார்ந்த சமத்துவ சமூகம் உருவாக மத சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம் என்று திமுக மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கல்வியினுடைய குறிக்கோள் என்பது அறிவை வளர்க்க நமது இழிவையும் முட்டாள்தனத்தையும் மூடநம்பிகையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்’ என்ற தந்தை பெரியாரின் கொள்கை வழிநின்று கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சி காலம் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆட்சி காலம் வரை தொடர்கிறது.
அண்மைகாலமாக ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடித்து இளைய தலைமுறையினரை அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் தேடவோடு கூடிய (Scientific Temper) அறிவார்ந்த சமுதாயமாக கட்டமைத்திடவும், பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார். அண்ணா கலைனார் காணவிரும்பிய சமத்துவ சமுதாயத்தை நிறுவிடவும் தி.மு.க மாணவரணி கல்வி நிலையங்களில் அமைக்க இருக்கும் ‘தமிழ்நாடு மாணவர் மன்றம் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.