Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 29ம் தேதி முதல் கலந்தாய்வு தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 20.2.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய புள்ளியியல் ஆய்வாளர், கணினியர் மற்றும் தடுப்பூசி பண்டகக்காப்பாளர், உதவி நூலகர், நூலக உதவியாளர் நிலை-1, உதவி பொறியாளர் (மின்னியல்) தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், உதவி பொறியாளர் (மின்னியல்) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், உதவி பொறியாளர் (மின்னியல்) பொதுப்பணி மற்றும் உதவி பொறியாளர் (மின்னியல்) இந்து சமய அறநிலையத் துறை பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதே போல ஆராய்ச்சி உதவியாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், செயலக அலுவலர் (சட்டம்), மொழிபெயர்ப்பாளர் மற்றும் இளநிலை மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்) பதவிக்கு மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 30ம் தேதி நடைபெறும். நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்குறிப்பாணையினை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தேர்வர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.