சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வுக்கான ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ளடக்கிய 358 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த ஜனவரி 6, 7 தேதிகளில் நடத்தியது. தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகளின் அடிப்டையில் 644 பேர் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பட்டியல் தேர்வாணைய வலைத்தளத்தில் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை டிஎன்பிஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு இணையதளத்தில் ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
previous post