Wednesday, April 17, 2024
Home » `உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கருங்குழி பேரூராட்சி பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு

`உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கருங்குழி பேரூராட்சி பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு

by Ranjith

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சி பகுதியில், முதலமைச்சர் அறிவித்த `உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட கண்காணிப்பாளர் சமயமூர்த்தி, வீதிகளில் உள்ள மின் விளக்குகள் ஒளிர்கின்றதா என ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கசடு கழிவுநீர் மேலாண்மை திட்டத்தின் மூலம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சிறப்பாக செயல்படுகிறது.

இதனால், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி சார்பில் பொதுமக்கள் என பல்வேறு அமைப்பினர் இங்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும், இந்த பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா, மியாவாக்கி முறையில் குறுங்காடுகள், புதிய குளங்கள் உருவாக்குவது, ஆக்கிரமிப்பால் காணாமல் போன குளங்களை கண்டுபிடித்து, அதை சீரமைத்தது விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயண வழி உணவு மேஜை உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் இந்த பேரூராட்சி செயல்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த, ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ், கருங்குழி பேரூராட்சி பகுதிகளில் முறையாக மீன் விளக்குகள் ஒளிர்கிறதா என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில், செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருமான சமயமூர்த்தி நேரில் பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சஜிதா பர்வீன், பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக, இப்பேரூராட்சியில் சிறப்பாக செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் அருண்ராஜ் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, பேரூராட்சி தலைவர் தசரதன், திமுக பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

* கருங்குழி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா, மியாவாக்கி முறையில் குறுங்காடுகள், புதிய குளங்கள் உருவாக்குவது, ஆக்கிரமிப்பால் காணாமல்போன குளங்களை கண்டுபிடித்து, அதை சீரமைத்து விளையாட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயண வழி உணவு மேஜை உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் இந்த பேரூராட்சி செயல்படுகிறது.

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi