தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை எடுத்த குண்டடம் அருகே உள்ள ருத்ராவதி கணபதிபாளையம் வீரக்குமார்-பானுமதி தம்பதியின் மகன் பரணிதரன் (3). நேற்று மதியம் பானுமதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வாசலில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பரணிதரன் திடீரென காணவில்லை. அவனை தேடியபோது, வீட்டின் முன் உள்ள ஆழமான தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரணிதரன் இறந்து கிடந்தது தெரியவந்தது.