கொழும்பு: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ‘நிரீக் ஷக்’ 70.5 மீட்டர் நீளமுடைய நீர்மூழ்கி மீட்பு மற்றும் டைவிங் ஆதரவு கப்பல். 137 குழுவினரை உள்ளடக்கிய இந்த கப்பலுக்கு ஜீது சிங் சவுகான் தளபதியாக உள்ளார். இந்த கப்பல் இலங்கை கடற்படையினருக்கு டைவிங் உள்ளிட்ட பயிற்சிகளை தருவதற்காக நேற்று திரிகோணமலை சென்றடைந்தது. பயிற்சி மற்றும் பயணத்தை முடித்து கொண்டு செப்டம்பர் 21ம் தேதி இலங்கையில் இருந்து ஐஎன்எஸ் ‘நிரீக் ஷக்’ இந்தியா திரும்ப உள்ளது.