Wednesday, April 24, 2024
Home » 3 மாதத்தில் விசாரணையை முடிக்க ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தகவல்

3 மாதத்தில் விசாரணையை முடிக்க ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தகவல்

by MuthuKumar

சென்னை: அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் கெளதமன், என்.பரணிகுமார் ஆஜராகினர். கௌதமன் வாதிடும்போது, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி அல்லி, வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தததையடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi