சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக கட்டுக்கட்டாக கொண்டுசென்ற ரூ.4கோடி பணத்தை ரகசிய தகவலின்படி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் தாம்பரம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகவில்லை. மாறாக, நயினார் நாகேந்திரனின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி தாம்பரம் ஆய்வாளர் பால முரளியிடம் மனு ஒன்றை அளித்தார்.அத்தகைய மனுவில்
10 நாள் அவகாசம் கேட்டு நயினார் கடிதம்
விசாரணைக்கு ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் போலீசுக்கு நயினார் நாகேந்திரன் கடிதம் அனுப்பி இருந்தார். சட்ட விதிகளின்படி அவகாசம் அளிக்கப்பட்டு மேலும் ஒரு சம்மன் அனுப்பப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.