சோழிங்கநல்லூர்: சென்னை புழல் மத்திய சிறையில், சென்னை எம்ஜிஆர் நகர், விவேகானந்தர் தெருவை சேர்ந்த ராஜேஷ் (50) என்பவர் மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை விசாரணை பிரிவில் இருந்த கைதி ராஜேஷ் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட் அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ராஜேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.