சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 10 செ.மீ., மதுரை மாவட்டம் எழுமலையில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. திருத்தணியில் 7 செ.மீ., ராஜபாளையம், தென்காசி மாவட்டம் சிவகிரி, காஞ்சிபுரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.