ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒருவரை சரமாரியாக அடித்து, உதைத்து அவர் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் காயமடைந்து அரை மயக்கத்தில் தலையில் சுருண்டு கிடந்த ஒருவரை தரையில் போட்டு எட்டி உதைத்து அவர் மீது சிறுநீர் கழிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான ஆதித்யா என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.