பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் காங்கிரஸ் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ‘பல்லடத்திற்கு இன்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி முன்னாள் முதல்வர் காமராஜர் வேடமிட்ட நபரை அழைத்து சென்று, பாஜவினர் கடை வீதியில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். அவர் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் மறைந்தார். மேலும் காமராஜர் மதசார்பின்மை கொள்கை உடையவர். அவரது வேடத்தை கொள்கை வேறுபாடு கொண்ட பாஜவினர் பயன்படுத்துவது நியாயம் அல்ல. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.