சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பானங்களுக்கு அச்சிடப்பட்ட பில் வழங்கும் நடைமுறை 2 வாரங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரக்கோணம் மற்றும் ராமநாதபுரத்தில் இந்த நடைமுறை இருக்கும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைவில் அமல். மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் உள்ளநிலையில், பில் நடைமுறை வந்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.