சென்னை: தமிழ்நாட்டில் 19 நிறுவனங்கள் நாளை நேரடியாக தயாரிப்புகளை தொடங்க உள்ளன. ரூ.17,616 கோடி முதலீடுகளுக்கான துவக்க விழா நாளை நடக்க உள்ளது. சுமார் 65,000 வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, நாளை ₹51,000 கோடி முதலீட்டு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது.