ஜகார்தா: இந்தோனேஷியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹராவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் இந்தோனோஷியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹரா உடன் மோதினார். ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான போட்டியில், அபாரமாக ஆடிய சிந்து, 22-20, 21-23, 21-15 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தோனேஷியா ஓபன் பேட்மின்டன்: ஜப்பான் வீராங்கனை தோல்வி; சிறுத்தையாய் சீறிய சிந்து இரண்டாவது சுற்றுக்கு தகுதி
0
previous post