இந்தோ- திபெத் எல்லை படையில் காலியாக உள்ள 128 தலைமை காவலர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம் :
1. Head Constable (Dresser Veterinary) (Male): 8 இடங்கள். (பொது-4, எஸ்டி-1, ஒபிசி-3)
2. Head Constable (Dresser Veterinary) (Female): 1 இடம் (பொது)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கால்நடை மருத்துவத்தில் துணை கால்நடை மருத்துவ படிப்பை படித்திருக்க வேண்டும் அல்லது கால்நடை சம்பந்தமாக டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.வயது: 18 முதல் 27க்குள்.
3. Constable (Animal Transport) (Male): 97 இடங்கள் (பொது- 44, எஸ்சி-11, எஸ்டி-10, ஒபிசி-22, பொருளாதார பிற்பட்டோர்-10).
4. Constable (Animal Transport) (Female): 18 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-2)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதி: மெட்ரிக்குலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி. வயது; 18 முதல் 25க்குள்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.25,500-81,100.
5. Constable (Kennelman) (Male Only: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. சம்பளம்: ரூ.21,700-69,100.
உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரி பார்த்தல், எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.09.2024.