டெல்லி: இந்தியாவின் விண்வெளித் திட்டம் புதிய உயரங்களை அளந்து, இளம் கனவு காண்பவர்களின் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது என்று ராகுல்காந்தி ட்விட் செய்துள்ளார். இன்றைய முன்னோடி சாதனைக்காக இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகல் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3ன் பெயரிடப்படாத நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கம் நமது அறிவியல் சமூகத்தின் பல தசாப்தகால அபார புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பின் விளைவாகும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்