தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைக்க முயற்சிகளை எடுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நாளை (பிப்.18) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் புறக்கணிப்பு, தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை விடுவிக்காதது, மும்மொழிக்கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.