புதுடெல்லி: உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2011-12ம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் தீவிர வறுமை வகிதம் 10 ஆண்டுகளில் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிர வறுமையை மதிப்பிடுவதற்கான அளவு கோல்களை அதிகரித்துள்ளது. முன்பு ஒருநாளுக்கு 2.15 அமெரிக்க டாலருக்கு கீழ் இருந்த வருமான அளவு தற்போது 3 டாலர்களாக (ரூ.255) அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவின் தீவிர வறுமை சதவீதம் கடந்த 10 ஆண்டில் குறிப்பிடத்தக்க சரிவை கண்டுள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டு 27.1 சதவீதமாக இருந்த தீவிர வறுமை, 2022-23ல் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 34 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்த நிலையில், அதன் எண்ணிக்கை 7.5 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப் பொருள் விநியோகம் செய்வது மற்றும் கிராமப்புற, நகர்ப்புற வறுமை இடைவெளி குறைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.
2022-23ம் ஆண்டில் இந்தியாவில் தீவிர வறுமை 5.3 சதவீதமாக குறைந்தது: உலக வங்கி அறிக்கை
0