Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியாவிற்கு சொந்தமான ஏஐ மாடல் உருவாக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: உலகளாவிய செயற்கை நுண்ணறிவு போட்டிக்கு மத்தியில், இந்தியாவும் தனக்கு சொந்தமான ஏஐ பவுண்டேஷன் மாடலை விரைவில் உருவாக்க இருப்பதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சீனா சமீபத்தில் வெளியில் டீப்சீக் எனும் செயற்கை நுண்ணறிவு மாடல் உலக அளவில் பிரபலமடைந்து, இத்துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவும் தனக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு பவுண்டேஷன் மாடலை உருவாக்க இருப்பதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘இந்தியா உலகத்தரம் வாய்ந்த ஏஐ பவுண்டேஷன் மாதிரியை உருவாக்க உள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள சிறந்த ஏஐ மாடல்களுடன் போட்டியிடும் வகையில் இருக்கும்.

இந்த பவுண்டேஷன் மாடல், நமது நாட்டிற்காகவும், நமது தேசத்தாலும், நமது மக்களுக்காகவும் எந்த பக்கசார்பற்ற தகவல்களுடன் உருவாக்கப்படும். இதற்காக 18,693 கிராபிக்ஸ் புராசசிங் யூனிட்கள் (ஜிபியு) செயலாக்கப்பட்டுள்ளன. மேலும், ஏஐ பாதுகாப்பு நிறுவனம் விரைவில் தொடங்கப்படும். அடுத்த 8 முதல் 10 மாதத்தில் இந்தியாவின் சுயமான ஏஐ பவுண்டேஷன் மாடல் தயாரிக்கப்படும்’’ என்றார். இந்த பவுண்டேஷன் மாடலில் அனைத்து விதமான பதில்கள், தகவல்கள் சேமிக்கப்படும். இதன் மூலம், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மலிவு விலையில் ஏஐ செயலிகளை உருவாக்க முடியும்.