ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3வது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 352 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இருந்தபோதிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.