நியாமி: ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நைஜரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சாலை மார்க்கமாக வெளியேற உத்தரவிட்டுள்ளது. நைஜர் தலைநகர் நியாமியில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.