ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார். காலிறுதி போட்டியில் சீன தைபே வீரர் சோ டீன் சென்-ஐ வீழ்த்தினார் இந்திய வீரர் லக்ஷயா சென். சீன தைபே வீரரை 19-21, 21-15, 21-12 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் லக்ஷயா சென் வீழ்த்தி வெற்றி பெற்றார்.