ஒடிசா: பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருந்தபோது 2018ம் ஆண்டில் இருந்து இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளுக்கு அரசின் சார்பில் ஸ்பான்ஸர் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.