ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் தேசிய சாதனையை முறியடித்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் 10.18 வினாடிகளில் இலக்கை கடந்து அனிமேஷ் தேசிய சாதனை படைத்தார். 100 மீ. ஓட்டத்தில் குரிந்தேர்வீர் 10.20 வினாடியில் இலக்கை கடந்தே இதுவரை தேசிய சாதனையாக இருந்தது. 200 மீட்டர் ஓட்டத்திலும் 20.32 வினாடிகளில் இலக்கை கடந்து அனிமேஷ் ஏற்கனவே சாதனை படைத்திருந்தார்.