லண்டன்: இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஆட்டம் இன்று இரவு லண்டனில் நடைபெற உள்ளது. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் இன்றும் வெளுக்க வாய்ப்பு அதிகம். நடாலியா தலைமையிலான அணியில் திறமைக்கு பஞ்சமில்லை. சொந்த மண்ணில் விளையாடியும் இந்தியாவுக்கு எதிராக, அடுத்தடுத்து 2தோல்விகளை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். அதனால் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. எனவே இங்கிலாந்துக்கு வெற்றி அவசியம். காரணம் இந்த ஆட்டத்தில் தோற்றால் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் தொடரை இழப்பதுடன் ஹாட்ரிக் தோல்வியை சந்திக்க வேண்டி வரும். அதனால் இங்கிலாந்து இன்று கூடுதல் வேகம் காட்டக் கூடும். இந்தியாவும் இன்றைய ஆட்டதில் வென்று ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்த முனைப்புக் காட்டும். இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய 8 டி 20 தொடர்களில் ஒரே ஒரு ஆட்டம் கொண்ட முதல் தொடரில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. மீதி 7 தொடர்களை தொடர்ந்து இங்கிலாந்து கைப்பற்றி உள்ளது.
ஹாட்ரிக் முனைப்பில் இந்திய வீராங்கனைகள்
0