ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுப் போட்டியில் நேற்று ரஷ்யாவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீரர் டேனியில் மெத்வதெவ், அமெரிக்க வீரர் டாம்மி பால் உடன் மோதினார். அபாரமாக ஆடிய மெத்வதெவ், 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் உலகின் 9ம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், டென்மார்க்கை சேர்ந்த உலகின் 13ம் நிலை வீரர் ஹோல்கர் வைடஸ் நோட்ஸ்கோன் ரூனே உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ரூனே, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.