சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. சென்னையில் நடந்து வரும் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை இந்திய அணி வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ்தீப் சிங், மன் பிரீத் சிங், சுமித், கார்த்திக் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். நாளை இரவு 8.30 மணிக்கு இறுதிப் போட்டியில் இந்தியா மலேசியா இடையே போட்டி நடைபெறும்.