ஹனோய்: தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன், பிரதிமா தம்பதியினரின் மகன் அர்ஷித் அஷ்ரித். வியட்நாம் நாட்டில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். நேற்று அங்கு பைக்கில் வேகமாக சென்ற போது நிலைதடுமாறி அருகே உள்ள சுவரில் மோதி மாணவர் அர்ஷித் பலியானார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அர்ஷித் பின்னால் அமர்ந்து இருந்த அவரது நண்பரும் படுகாயம் அடைந்துள்ளார். மாணவர் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய மருத்துவ மாணவர் வியட்நாம் விபத்தில் பலி
0