சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபீசர்ஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணி:
1. லோக்கல் பேங்க் ஆபீசர், மொத்த காலியிடங்கள்: 500 இடங்கள்.
2. சம்பளம்: ரூ.48,480- ரூ.85,920.
3. வயது: 01.05. 2025 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
4. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் ரீசனிங் மற்றும் கம்ப்யூட்டர் அப்டிடியூட், பொது அறிவு, பொருளியல் அறிவு, வங்கி அறிவு, டேட்டா அனலைசிஸ் மற்றும் இன்டர்பிரிடேஷன், ஆங்கில அறிவு ஆகிய 4 தாள் தேர்வு நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, சேலம், கோவை, வேலூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சை, கரூர், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
5. கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.iob.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2025.