டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். இந்த உன்னதமான நாளில் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அத்தனை தியாகிகளுக்கும் வணக்கம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துகள். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரது பங்களிப்பு அளப்பரியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.